தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 5ஆவது வார்டு குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக கான்கிரீட் குழிகள் தோண்டப்பட்டது. ஆரம்பத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்ற விபரம் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.
செல்போன் கோபுரம் அமைப்பதற்காக குழி தோண்டப்படுகிறது என்று தெரியவந்ததும், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கியும், குழிக்குள் இருந்த கற்களை தூக்கி எரிந்தும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் செல்போன் நிர்வாகத்தினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கோபுரம் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என உறுதியளித்தப் பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : காயத்ரி ரகுராம் மீது விசிகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு!