ETV Bharat / state

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி டூ மதுரை பயணிகள் ரயில் சேவை - மக்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Jun 15, 2023, 5:12 PM IST

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிநாயக்கனூர் மற்றும் மதுரை இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தேனி: போடிநாயக்கனூர் மற்றும் மதுரை இடையே பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் பயணிகள் ரயில் சேவையை தொடங்கிவைக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடி- மதுரை இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தொடர்ந்து ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி முதல் மதுரை இடையேயான முதல் கட்ட அகல ரயில் பாதைப்பணிகள் முடிவு பெற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. மேலும் போடிநாயக்கனூர் - தேனி வரையிலான ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்காக 110 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தருமபுரி டூ திருவாரூர் சைக்கிள் பயணம்.. திமுக தொண்டரின் புதிய முயற்சி!

இந்நிலையில் தற்போது போடிநாயக்கனூர் முதல் மதுரை வரையிலான முழு பயணிகள் ரயில் சேவை திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. இன்று இரவு போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில், இருந்து மதுரை வரையிலான பயணிகள் ரயிலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திர நாத், ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையைக் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை பேச்சு ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம்: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயக்கப்படுகிற விரைவு ரயில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இனி தேனியில் இருந்து சென்னைக்கு நேரடியாக பயணிக்கலாம் என்ற வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷன் எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.