தேனி நகர் காவல்துறையினர் பெரியகுளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்ததது. அதை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, ஒட்டுநர் காரை நிறுத்தமல் சென்றார். பின் அந்தக் காரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் பின்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து காரின் ஓட்டுநர் ஜலாலுதீன், காரில் பயணித்த ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு தேனி வழியாக குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வாகனத்தில் இருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.