ETV Bharat / state

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகள், மல்லுக்கட்டிய வீரர்கள்! - ஶ்ரீஏழைகாத்தம்மன், ஶ்ரீவல்லடிகாரசுவாமி கோவில்

உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் ஶ்ரீஏழைகாத்தம்மன், ஶ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு
பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 25, 2021, 6:12 AM IST

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஶ்ரீஏழைகாத்தம்மன், ஶ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டி கரோனா நோய் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி அரசின் வழிகாட்டுநெறிமுறைகளுக்குப்பட்டு இன்று (ஜன.24) நடத்தப்பட்டது. தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் மாடுபிடி வீரர்களால் உறுதிமொழியாக எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் காளையான வல்லவர் அவிழ்த்து விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் காளையை தொட்டு வணங்கினர். பின்னர் ஜல்லிக்கட்டுக்கான மாடுகள் இறக்கிவிடப்பட்டது. வாடிவாசலில் இருந்து துள்ளித்குதித்த காளையுடன் வீரர்கள் மல்லுக்கட்டி நின்று விளையாடினர்.

இந்த போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 600 மாடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 566 காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 700 பேர் சுழற்சி முறையில் களம் கண்டனர்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ குழுக்களால் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, ரொக்கப்பணம், எவர்சில்வர் பானை, அண்டா, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதற்காக தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 4 துணை கண்காணிப்பாளர்கள் உள்பட காவல்துறையினர் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வடக்கம்பட்டியில் களைகட்டிய முனியாண்டி திருவிழா - பக்தர்களுக்கு சுடச் சுட பிரியாணி விருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.