ETV Bharat / state

‘கட்சி தொண்டனும் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்’ - ஓபிஎஸ்

ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், கட்சித்தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 3, 2022, 11:10 PM IST

தேனி: 'அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் மிட்டா மிராசுதாரர்கள், கோடீஸ்வரர் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றுபடுவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த தந்த நேர்வழி பாதையில் நடப்போம்' என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸை சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, 'கட்சி தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வர வேண்டும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்த உள்ளார்கள். கழக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

தற்போது உள்ள சட்ட விதிகளின்படி தலைமைப்பொறுப்புக்கு மிட்டா மிராசுதாரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்றும்; அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும்; ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்து தந்த நேர்வழி பாதையில் அனைவரும் செல்வோம் எனவும் ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.

இதையும் படிங்க: சுப்பிரமணியன்சுவாமி இல்லத்திற்கு ‘Z' பிரிவு பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.