ETV Bharat / state

ஓ.பி.ஆர் விஷயத்தில் ஏன் அமைதியாக இருந்தோம் தெரியுமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Jan 30, 2020, 6:45 PM IST

தேனி: ரவீந்திரநாத்தை தாக்க வந்த விவகாரத்தில் இரு சமுதாயினத்திற்குமிடையே பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அமைதி காத்தோம் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

minister rejendra balaji
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தேனி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) சங்கத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் ஒன்றியத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

தேனியில் உள்ள என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், அதற்கான ஆணையை ஓ.ராஜாவிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். துணைத்தலைவராக செல்லமுத்து பதவியேற்றார். அவருடன் நிர்வாகக் குழு இயக்குநர்கள் பதவி ஏற்றனர்.

இதையும் படியுங்க: ஆவினின் புதிய ரக பாக்கெட் பால் அறிமுகம்...!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "ஓ.ராஜா பதவி ஏற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் கூறிய விதிகளின்படி பதவியேற்றுள்ளார். கம்பத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை தாக்க வந்தவர்களை எங்களுக்கு தடுக்கவும் தெரியும், அவர்களது கரங்களை முறிக்கவும் தெரியும். ஆனால் இரு சமுதாயத்தினருக்குமிடையே பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பயங்கரவாத இயக்கங்கள், தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் கட்சி திமுக. அது மக்களிடையே மதவெறி அரசியலை தூண்டிவருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில், இஸ்லாமியர்கள் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் திமுகதான்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூலைச்சலவை செய்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாற்றி அவர்கள் வாக்குகளை பெறும் நோக்கில் இதனை திமுக செய்துவருகிறது" என குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

இதையும் படியுங்க: ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி

Intro: நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேனியில் பேட்டி.

Body: தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) சங்கத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் ஒன்றியத் தலைவராக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். தேனியில் உள்ள என்.ஆர்.டி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அதற்கான ஆணையை ஓ.ராஜாவிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். துணைத்தலைவராக செல்லமுத்து பதவியேற்றார். உடன் நிர்வாகக்குழு இயக்குனர்கள் பதவி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேனி ஆவின் இடைக்காலத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார். தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலின் அறிவுரைப்படி, ஆவின் ஆணையர் உத்தரவுப்படி தான் ஓ.ராஜா பதவியேற்றுள்ளார். இதுவரை ஆவின் ஒன்றிய தலைவர் பதவி ஏற்பு விழாவில் நான் கலந்து கொண்டதில்லை. எங்கள் ஊரின் தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட நான் செல்லவதில்லை. ஆனால் நேற்று இரவு ஓ.ராஜாவின் அன்பு கட்டளையை ஏற்று இங்கே வந்துள்ளேன். இன்னும் பத்து பதினைந்து நாளில் தேனி ஆவினில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழக - கேரள மாநிலத்தை இணைக்கும் மாவட்டம் தேனி. இங்கே பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. சரியான தலைவர் இருந்தால் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். தற்போது ஓ ராஜா பொறுப்பில் வந்துள்ளார். இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள குடும்பம் ஓபிஎஸ் குடும்பம். பிறருக்கு தீங்கு செய்யாத, கெடுதல் செய்யாத, ஆட்சி தான் ஆன்மீக ஆட்சி. தமிழகத்தில் எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையில் நடைபெறுவதும் ஆன்மீக ஆட்சி தான் என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓ.ராஜா பதவி ஏற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் சொன்ன விதிகளின்படி பதவியேற்றுள்ளார். கம்பத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமாரை தாக்க வந்தவர்களை எங்களால் தடுக்கவும் தெரியும், அவர்களது கரங்களை முறிக்கவும் தெரியும். ஆனால் சமுதாயப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம். பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் கட்சி திமுக. மக்களிடையே மதவெறியைத் தூண்டி அரசியல் செய்து வருகிறது திமுக. நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இஸ்லாமியர்கள் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் திமுக தான். அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூலைச்சலவை செய்துவருகிறது திமுக. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக மற்றும் காங்கிரஸ் தான் என்றார்.

Conclusion: பேட்டி : ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்)

பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உரை நேரலை செய்யப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.