தேனி: தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு,பாட்டு பாடி நடனமாடி ஓனம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். ஓணம் பண்டிகையை ஒட்டி தேனி வடபுதுப்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகைக்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மாணவிகள் மலையாள மக்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற சேலை அணிந்தும், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, பின்னர் மலையாள பாடல்களுக்கு ஏற்ப நடனமாடியும், உற்சாகம் பொங்கும் வகையிலும் குதூகலும் ஊட்டும் வகையிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாலும்,அதுவும் தங்களின் நண்பர்களோடு கொண்டாடுவதால் மிகவும் உற்சாகமடைந்து இருப்பதாகவும் மறக்க முடியாத ஓணம் வண்டியாக இது அமைந்திருப்பதாக ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓணம் கொண்டாடிய வானதி சீனிவாசன்..