ETV Bharat / state

தேனி அருகே போலி உரம் தயாரித்துவந்த நிறுவனத்திற்கு சீல்!

தேனி: கோம்பைப் பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரம் தயாரித்து விற்பனை செய்துவந்த நிறுவனத்தை தேனி தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் பூட்டி சீல்வைத்தனர்.

author img

By

Published : Jul 24, 2019, 7:21 PM IST

போலி உரம் தயரித்து வந்த நிறுவத்திற்கு சீல்

தேனி மாவட்டம் கோம்பை காலனி பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது. இந்நிறுவனத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரம், வேளாண் மருந்துகள் தயரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, அங்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பதாகக் கூறி அனுமதியின்றி ரசாயன உரங்கள் விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேனி தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடத்திய ஆய்வில், ஆர்கானிக் உரம் தயரிப்பதாக கூறி ரசாயனங்கள் கலந்து உரம் தயாரித்து கொண்டிருந்ததும், மேலும் அரசு அங்கீகாரம் பெறாமல் முறையற்ற வகையில் உரம் விற்பனை செய்து வந்ததும், உறுதியானது.

பின்னர், அங்கிருந்த உர மாதிரிகளை சேகரித்து அதனை பரிசோதனைக்கு உட்படுத்தவதற்கு எடுத்துச் சென்றனர்.

போலி உரம் தயாரித்துவந்த நிறுவனத்திற்கு சீல்

இதையடுத்து, நிறுவன உரிமையாளர் அனிஷ் ஆண்டனி கைது செய்யப்பட்டு, போலி உரம் தயாரித்துவந்த கட்டடத்தை பூட்டி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் இது குறித்து கோம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது என விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:         தேனி மாவட்டம் கோம்பையில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்த வேளாண் அதிகாரிகள்.
Body: தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரம், வேளாண் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோம்பை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், கோம்பை காலணி பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் ஆண்டனி என்பவர் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பதாகக் கூறி அனுமதியின்றி உரங்கள் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதனை தெடர்ந்து வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தேனி தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பிரசன்னா, தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஆர்கானிக் உரம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் ரசாயனங்கள் கலந்து உரம் தயாரித்து கொண்டிருந்ததாக தெரியவந்தது.
மேலும் அரசு அங்கீகாரம் பெறாமல் முறையற்ற வகையில் உரம் விற்பனை செய்து வந்ததும், விற்பனைக்காக உரங்கள் மூடை மூடையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த உர மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் அதனை பரிசோதனைக்கு உட்படுத்தவதற்கு எடுத்துச்சென்றனர்.
         இதனையடுத்து உரிய அரசு அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த உர மூடைகள் மற்றும் கட்டிடத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இது குறித்து கோம்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதில் உரங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன, எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்ற என்பது குறித்து விபரங்கள் தெரிய வரும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.
         
Conclusion: தேனி மாவட்டத்தில் போலி உர நிறுவனம் செயல்பட்டு வந்தது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் தேனி மாவட்டத்தில் போலியான உர நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.