ETV Bharat / state

'மத்திய அரசே! நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிடு' - Theni

தேனி: நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும், அதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திடக் கோரி உழவர் உழைப்பாளர் கட்சியினர் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நியூட்ரினோ
author img

By

Published : Jul 19, 2019, 4:58 PM IST

தேனி மாவட்டத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை கைவிடக்கோருகின்ற மக்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் செல்லமுத்து, 'விவசாயிகள் பாதிப்படைகின்ற, அவர்கள் எதிர்க்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கூறிக் கொண்டிருக்கும்போதே, புதிதாக ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு டெல்லியில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு சொல்வதற்கும், செய்வதற்கும், சம்பந்தம் இருக்காது. தமிழ்நாடு அரசு சொல்வதை மத்திய அரசு கேட்காத காரணத்தினால்தான் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகின்றோம்' என்றார்.

Intro: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அழுத்தம் கொடுத்திடக் கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் உழவர் உழைப்பாளர் கட்சியினர் வலியுறுத்தல்.

Body: தேனி மாவட்டத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் அளித்தனர்.
இவற்றில் தமிழகத்தில் உள்ள விவசாய பொருட்கள் விற்பனைக் கடைகளில் பயோகேஸ் என்ற பெயரில் போலியான மருந்துகளை விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இத்தகைய செயல்பாடுகள் தேனி மாவட்டத்தில் உள்ள கடைகளிலும் நடைபெற்று வருகிறது. எனவே இதுபோன்ற விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் தேனி மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
மேலும் விவசாயம் சார்ந்த தேனி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை கைவிடக்கோருகின்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் செல்லமுத்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகியோர் பேசுகையில் விவசாயிகள் பாதிப்படைகின்ற, அவர்கள் எதிர்க்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே, புதிதாக ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு டெல்லியில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
இதேபோல் தமிழகத்தில் நீட் தேர்வு வராது என்று கூறி தீர்மானம் இயற்றினார்கள். ஆனால் அந்த தீர்மானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்துவிட்டதை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்தனர். இவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும், சம்பந்தம் இருக்காது. தமிழக அரசு சொல்வதை மத்திய அரசு கேட்காத காரணத்தினால் தான் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கு எதிராக போராடுகின்றோம் என்றார்.

Conclusion:பேட்டி : செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.