ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் இருவருக்கும் நீதிமன்ற காவல்! - நீட்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு
author img

By

Published : Sep 26, 2019, 11:09 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாணவரின் தாய் கயல்விழிக்கு இந்த வழக்கில் தொடர்பு ஏதும் இல்லாததால் அவர் சிபிசிஐடி காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்து சென்றனர். முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் இருவருக்கும் நீதிமன்ற காவல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உதித் சூர்யா!

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை 15நாள் நீதிமன்ற காவலில் அடைக்க தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
வரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக நீதிபதி உத்தரவிட்டதையடுத்து தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடி கொண்டு சென்றனர்.

Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் மீது 120(பி), 419 மற்றும் 420 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாணவரின் தாய் கயல்விழிக்கு இந்த வழக்கில் தொடர்பு ஏதும் இல்லாததால் அவரை சிபிசிஐடி போலீசார் விடுவித்தனர். தேவைப்பட்டால் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவர் உதித்சூர்யா மற்றும்அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் தற்போது அழைத்து சென்றுள்ளனர். முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி வரை காவலில் அடைக்க தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர்.

Conclusion: தொடர்ந்து நாளையும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.