நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! - நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமின் மனு மீதான விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தேனி : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சென்னை மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ் ஆகியோரது ஜாமின் மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார் .
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்னிலையில் ஆறு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மாணவர்கள், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28, 29 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் நான்கு பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் நான்காம் தேதி மனு அளித்திருந்தார். அக்டோபர் 15ல் தேனி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன் நடந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயதினகரன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின்போது மாணவர்கள் உதித்சூர்யா, இர்பான் மீது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உறுதிப்படுத்திய சிபிசிஐடியினர், மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்ததை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை என்றும் மேலும் நான்கு கேள்விகளுக்கு சிபிசிஐடி தற்போது வரை பதிலளிக்கவில்லை என்றும், எனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி முன் வாதிட்டனர். இதற்கு சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதத்தை கேட்டபிறகு, கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி பன்னீர்செல்வம் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து ஜாமின் கோரி கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:
கேரளாவிற்கு மணல் கடத்திய ஏழு லாரிகள் பறிமுதல்: கனிம வளத்துறையினர் நடவடிக்கை
தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா உத்தரவு.
Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி மற்றும் அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்னிலையில் 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் சென்னை பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் பிரவீன், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தைகள் சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28, 29 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் நான்கு பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி மனு அளித்திருந்தார். அதனையடுத்து அக்டோபர் 15ல் கூடிய தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன் மாணவர்கள் பிரவீன், ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயதினகரன், விஜயகுமார் ஆஜராகினர்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில் முறையாக நீதி எழுதி தேர்ச்சி அடைந்தவர்கள். அதன் மூலம் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் உண்மையான சான்றிதழ் அளித்து கல்லூரி முதல்வர் முன்னிலையில் சேர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தாமாகவே காவல்துறையினரிடம் விளக்கம் அளிக்க வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சிபிசிஐடி யினர் விசாரணைக்காக அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் மாணவர்கள் உதித்சூர்யா மற்றும் இர்பான் மீது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உறுதிப்படுத்திய சிபிசிஐடி யினர், மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்ததை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு சிபிசிஐடி தற்போது வரை பதிலளிக்கவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி முன் வாதிட்டனர். இதற்கு சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதத்தை கேட்டபிறகு, கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரின் ஜாமின் மனுவை நீதிபதி பன்னீர்செல்வம் வழக்கை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து ஜாமின் கோரி கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
Conclusion: இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா ஜாமின் மனுவை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.