ETV Bharat / state

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் போலீசார் விசாரணை! - விசாரணை

தேனி : நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்
author img

By

Published : Sep 22, 2019, 9:39 AM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல் நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் தனிப்படை விசாரணை அலுவலரான உஷாராணி, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் காவல் துறையினர் விசாரணை

கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் புகார் கிடைத்தது முதல் தற்போதுவரை மேற்கொண்ட விசாரணை, காவல் நிலையத்தில் தாமதமாக புகார் அளித்ததற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், ஆள்மாறாட்டம் செய்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேஷுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விசாரணையில் முதல்வர் ராஜேந்திரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்றிருப்பதாகவும் விசாரணைக்கு கல்லூரி முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தனிப்படை அலுவலர் உஷாராணி தெரிவித்தார். மேலும், இந்த விசாரணை சட்டத்திற்கு சாதகமாக நடைபெற்றுவருவதாகவும் முழு விசாரணை எப்போது முடிவடையும் என்று தற்போது கூற இயலாது என்றும் கூறினார். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், வழக்கமாக நடைபெறும் விசாரணைதான் தற்போது நடைபெறுகிறது என்றார்.

இதையும் படிங்க : நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்!

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவ மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேஷ்க்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் காவல்துறை அதிகாரி விசாரணையில் தகவல்..

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் க.விலக்கு காவல்நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் தனிப்படை விசாரணை அதிகாரியான உஷாராணி மற்றும் சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் இன்று
விசாரணை நடத்தினர்.
கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சுமார் 3மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், புகார் கிடைத்ததது முதல் தற்போது வரை மேற்கொண்ட விசாரணை, காவல்நிலையத்தில் தாமதமாக புகார் அளித்ததற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் வெங்கடைஷ்க்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணையில் முதல்வர் ராஜேந்திரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், விசாரணைக்கு கல்லூரி முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தனிப்படை அதிகாரி உஷாராணி தெரிவித்தார். மேலும் இந்த விசாரணை சட்டத்திற்கு சாதகமாக நடைபெற்று வருவதாகவும் முழு விசாரணை எப்போது முடிவடையும் என்று தற்போது கூற இயலாது என்றார்..

Conclusion: இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், வழக்கமாக நடைபெறும் விசாரணை தான் தற்போது நடைபெறுகிறது என்றார்.

பேட்டி : 1) உஷாராணி ( தனிப்படை அதிகாரி)
2) ராஜேந்திரன் (கல்லூரி முதல்வர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.