ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 4 பேரின் பிணை மனு ஒத்திவைப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிரவீன், ராகுல், அவர்களின் தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகியோரது பிணை மனு மீதான விசாரணையை தேனி நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது.

NEET impersonation case: Bail postponement of 4 persons
author img

By

Published : Oct 14, 2019, 5:47 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ், மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் அடுத்தடுத்த நாள்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்களின் சார்பில் தேனி நீதிமன்றத்தில் பிணை கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10ஆம் தேதி நடைபெற்றபோது சிபிசிஐடி விசாரணை அலுவலர் சித்ராதேவி நேரில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

4 பேரின் பிணை மனு ஒத்திவைப்பு

இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையின்போது, மாணவர் சேர்க்கைக் குழுவிடம் ஆள்மாறாட்டம் குறித்த விசாரணை இன்னும் முழுமையடையவில்லை என சிபிசிஐடி தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி பன்னீர்செல்வம் நால்வரின் பிணை மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தொடரும் நீட் ஆள்மாறாட்ட கைது... இதுவரை மாணவர்கள்... இப்போது மாணவி!

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவர்களின் தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரது ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு.
ஆள்மாறாட்ட மருத்துவக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை கமிட்டியிடம் விசாரணை முடிவடையவில்லை என சிபிசிஐடி விளக்கம்.

Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 4மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவீன், பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு நால்வரையும் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நால்வரின் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போது சிபிசிஐடி விசாரணை அதிகாரி சித்ராதேவி நேரில் ஆஜராகததால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி ஆஜராகினார். அதில் ஆள்மாளாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மாணவர்கள் படித்து வந்த மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை கமிட்டியிடம் இன்னும் முழுமையாக விசாரித்து முடிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

Conclusion: அதனை ஏற்ற நீதிபதி பன்னீர்செல்வம் நால்வரின் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை ஒத்தி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.