நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான், பிரியங்கா மற்றும் அவர்களின் தந்தை என இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் கல்லூரி சேர்க்கையின்போது சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.
அதன் அடிப்படையில் சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு நேற்று தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இரண்டாம் நாளான இன்று சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் குழு தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்கள். இந்த விசாரணையின் போது, மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் சிபிசிஐடி அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.
இன்று நடைபெற்ற விசாரணையின் அறிக்கையை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துரையினர் நாளை சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த விசாரணையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கல்லூரி நிர்வாகம் உடந்தையாக இருந்தனவா என்பது குறித்த சில தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 4 பேரின் பிணை மனு ஒத்திவைப்பு