தேனி: மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முறைகேட்டின் முக்கிய குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீத். ஓர் ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்தவர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை 15நாட்கள் நீதிமன்றக்காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், 3 நாட்கள் விசாரணைக்காக ஜனவரி 8 முதல் 11ஆம் தேதி வரை மதுரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக்காவல் முடிவடைந்த நிலையில், தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் இடைத்தரகர் ரசீத் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரசீத்தை வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி வரை மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறைக்கு இடைத்தரகர் ரசீத் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலை!