தேனி மாவட்டம் போடி அடுத்த குலாலர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு(40). இவர், மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசியக் கொடியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக நகர செயலாளர் தண்டபாணி, போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தேசியக் கொடி அவமதிப்பு செய்தது, பிரதமர் மோடியை இழிவுபடுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஜோதிபாசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.