ETV Bharat / state

ரூ.180 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் - ஓபிஎஸ் - விரைவில் அரசாணை வெளியிடப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார்

தேனி: ஆண்டிப்பட்டி பகுதி மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழி நீர்த்திட்டம் ரூ.180 கோடி மதிப்பில் செயல்படுத்த வரும் வாரத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

deputy cm panneerselvam
deputy cm panneerselvam
author img

By

Published : Feb 18, 2021, 8:53 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு அரசின் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, சமூக நலத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் ஆயிரத்து 223 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில், வீட்டுமனை பட்டா, கோழி குஞ்சுகள், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரூ.180 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்

பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்திருந்த ஆண்டிபட்டி நெசவாளர்களின் துயர் துடைத்திட அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஆண்டிபட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து இங்குள்ள 20க்கும் மேற்பட்ட குளம், 50க்கும் மேற்பட்ட ஊரணி, கண்மாய்கள் நிரப்பட வேண்டும் என்பதாகும்.

திமுக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட செயல்படுத்தப்படாத இத்திட்டம் விரைவில் ரூ.180 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். வரும் வாரத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பூமிபூஜை போடப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.