ETV Bharat / state

தேனியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி - bus accident i

தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் -ஒருவர் பலி

author img

By

Published : Jun 17, 2022, 12:15 PM IST

தேனி: மாவட்டம் கூடலூர் நகரில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக வாகனங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரத்தில் மணல் சரிந்தது.

இதையடுத்து அதிகாலை காலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்றுள்ளது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தேனியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் -ஒருவர் பலி

பேருந்து கவிழ்ந்த உடன் அருகில் இருந்த மக்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த பேருந்தை ஜெய் மங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுனரான பழனிச்சாமி (50) என்பவர் இயக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் மண் சரிந்து இருப்பதை இரவு நேரத்தில் கவனிக்காமல் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ஜம்மு போலீஸ் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.