ETV Bharat / state

புதிய ஆட்சியர் அலுவலக கட்டட விவகாரம் குறித்து எம்எல்ஏ மனு - MLA poongothai

தென்காசி: புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் குறித்து ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் கேள்வி மனு அளித்துள்ளார்.

MLA has filed a petition with the District Collector

author img

By

Published : Aug 28, 2020, 8:12 PM IST

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக தென்காசி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ஆட்சியர் அலுவலகம் தற்போது வரை கட்டப்படவில்லை. இந்நிலையில், அண்மையில் புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்காக ஆயிரபேரி பகுதியில் இடத்தை தேர்வு செய்து அங்கு முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய கட்டடம் குறித்து சில தகவல்களை கேட்டு இன்று (ஆகஸ்ட் 28) மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை நேரில் சந்தித்து ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "புதிய கட்டடம் அமைப்பதற்கான இடம் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது, எத்தனை இடங்களை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள், கட்டடத்தின் அமைப்பு, சாலை வசதி, பேருந்து வசதி எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளேன். தற்போது தென்காசி அருகே ஆயிரப்பேரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அமைய இடம் தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தை சுற்றிலும் 100 ஏக்கர் விவசாய நிலம், குளங்கள் உள்ளன. எனவே வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.