ETV Bharat / state

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!

தேனி: பெரியகுளம் அருகே ஏடிஎம்-ல் விட்டுச் சென்ற பணத்தை நேர்மையுடன் காவல்துறையினரிடம் ஒப்படைத்த மெக்கானிக்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

5lakh cash handover
author img

By

Published : Jul 15, 2019, 9:19 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை போடி கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இவர், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றபோது, அறையினுள் கேட்பாறற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்த பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் அந்த பணப்பையை ஒப்டைத்து உரியவர்களிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார். அதில் 500 ரூபாய் தாள்கள் அடங்கிய ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

பணத்தை நேர்மையுடன் காவல்துறையினரிடம் ஓப்படைத்த மணிகண்டனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Intro:         பெரியகுளத்தில் ஏ.டி.எம் - ல் விட்டுச் சென்ற பணம் ரூ.5லட்சத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த மெக்கானிக்.! நேர்மையை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
Body:         தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (43). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை போடி கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர், இன்று பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் - ல் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அறையினுள் கேட்பாறற்று பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்க்கையில், உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அருகில் இருந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினரிடம் அந்த பணப்பையை ஒப்டைத்து உரியவர்களிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார். அதில் 500 ரூபாய் தாள்கள் அடங்கிய பணம் ஐந்து லட்சம் இருந்தது தெரியவந்தது.
Conclusion: இதனையடுத்து தனியாக கிடந்த பணத்தை எடுத்து ஓப்படைத்த மணிகண்டனை மாவட்ட காவல்; கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதே போல் அனைவரும் இவரின் நேர்மையை பாராட்டி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.