ETV Bharat / state

பலத்த காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு...! - கம்பம்

தேனி: கம்பம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்டள்ளது. அது கொலையா? தற்கொலையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1
author img

By

Published : Apr 2, 2019, 7:32 AM IST

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள மணப்படுகை என்ற பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இறந்தவருக்கு வயது 35 இருக்கலாம் என்றும், தலை மற்றும் முகப்பகுதிகளில் கல்லால் தாக்கிய சுவடுகள் தெரிவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து மோப்பநாய் கொண்டு காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுக்களை கொண்டு இறந்தவரது இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த வழக்கு பதிவு செய்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.