ETV Bharat / state

சாக்குப் பையில் துண்டு துண்டாக ஆண் சடலம் - மிஷ்கின் பட பாணியில் தேனியில் கொடூரம்! - tamil news

தேனி: உடல், கை, கால் ,தலை துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆண் சடலம்
ஆண் சடலம்
author img

By

Published : Feb 17, 2020, 5:11 PM IST

தமிழ் சினிமா துறையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கி சேரன் நடிப்பில் வெளிவந்த "யுத்தம் செய்" என்ற திரைப்படத்தில் கை, கால்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறும். இதேபோல தேனியில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சுருளிப்பட்டி சாலை வழியாக முல்லைப் பெரியாறு செல்கிறது. தற்போது, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. எனவே அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மீன் பிடித்து வருகின்றனர்.

மிஷ்கின் பட பாணியில் தேனியில் கொடூரம்

இந்நிலையில், நேற்றிரவு முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் வாகனத்தில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் கையில் சாக்குப் பையுடன் தொட்டமாந்துறை பகுதிக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பம் காவல் துறை, தீவிர சோதனை நடத்தினர். அதில், தொட்டமாந்துறை யானைக் கெஜம் பகுதியில் ஒரு சாக்குப் பையில் தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ஆணின் உடல் இருப்பது தெரியவந்தது. தலையில்லாத அந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, 4 தனிப்படைகள் அமைத்து குற்றாவாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சேலம் நாம மலையில் திடீர் தீ - பல்வேறு மரங்கள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.