ETV Bharat / state

தேனி கேந்திரிய வித்யாலயா பள்ளியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துக - ஓ. பி. ஆர் கோரிக்கை

தேனி: கேந்திரிய வித்யாலயா பள்ளியின் கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ளக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ. பி. ரவீந்திரநாத் குமார், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ. பி. ரவீந்திரநாத் குமார்

author img

By

Published : May 1, 2020, 3:01 PM IST

தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது அம்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு, தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில், பள்ளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக எட்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் முடியும்வரை தற்காலிகமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் 20 வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், கழிப்பறை, மின்சாரம், நீராதாரம் உள்ளிட்ட பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேனியில் அமையவுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடக் கோரி, அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓ. பி. ரவீந்திரநாத் குமார் கோரிக்கை வைத்துள்ளார். தனது இந்தக் கோரிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிற்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு மாதத்தில் ரூ.159 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் ஆன்லைனில் கொள்முதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.