![OPS And PANDIYARAJAN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2474246_theni.jpg)
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "காமராஜரின் திட்டங்களை சாதனையாக மாற்றிக் காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நுணுக்கங்களை அறிந்து பணியாற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன், இதற்கு முன் இதே துறையில் இருந்த அமைச்சர்களில் சிறந்த அமைச்சர்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20 கோடி நிதிக்காக தமிழக அரசு சார்பாக 10 கோடியும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பாண்டியராஜனின் முயற்சியாலேயே கிடைக்கப் பெற்றது. அந்த அளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
அவர் புள்ளி விபரங்களை கூறுவதில் புலி. அதனால் வைகைச்செல்வன் அவருக்கு புள்ளி ராஜா என்று பெயரே வைத்துள்ளார்", என்று நக்கலுடன் பேசி முடித்தார்.
ஓபிஎஸின் இந்த கலகலப்பான பேச்சால் அங்கிருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடையே சிரிப்பலை எழுந்தது.