ETV Bharat / state

இட ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி தாய், மகள் தற்கொலை முயற்சி

author img

By

Published : Mar 3, 2021, 7:25 PM IST

தேனி அருகே தங்களுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாயும், மகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

land-encourage-issues-mother-daughter-sucide-attemp
தேனி: இட ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்த முனியம்மாள் சலவைத் தொழில் செய்துவருகிறார். இவரது, கணவர் மாரிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கணவனின் மறைவிற்குப் பிறகு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு மதுரையில் தனது தாய் வீட்டில் மூன்று மகள், மகனுடன் அவர் வசித்துவந்துள்ளார்.

அதன்பின்னர், தனது பிள்ளைகளின் படிப்பிற்காக மீண்டும் வீரபாண்டிக்கு வந்த முனியம்மாள் தனது சொந்த வீட்டிலேயே வசிக்கத் தொடங்கினார். இதற்கிடையே வீட்டிற்கு அருகே முனியம்மாளுக்குச் சொந்தமான காலி இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த காமு என்பவர் ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல் கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளார்.

இது குறித்து காமுவிடம் முனியம்மாள் கேட்டதற்கு குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், மனமுடைந்த முனியம்மாள் தனது மகள் பவித்ராவுடன் இன்று (மார்ச் 3) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தாயும், மகளும் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனைக்கண்ட பணியில் இருந்த பெண் காவலர்கள், தக்க நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்த இருவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், தேனி நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இட ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

இடத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாயும், மகளும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மதுரை-தேனி ரயில் பாதையில் இன்று ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.