சென்னை : சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில், கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்களிடம் பேசிய ஈபிஎஸ், "அண்மைக்காலத்தில் அதிமுகவின் 10 முதல் 15 சதவீத வாக்குகள் குறைந்து விட்டது. எம்ஜிஆர் காலத்து தொண்டர்களெல்லாம் வயது முதிர்வால் உயிரிழந்து வருவதே அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைய காரணம். வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் இளைஞர்களாக இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பான்மையினரை அதிமுகவில் இணைத்தால் மட்டுமே வாக்குச்சரிவை சரிசெய்ய முடியும்.
சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தும் Facebook, X, insta-வில் அதிமுக குறித்த பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதுடன், தனியாக யூடியூப் சேனல்களை உருவாக்கி அதிமுகவிற்கு ஆதரவாக கருத்துகளை பரப்புமாறும் வலியுறுத்தினார்.
அதிமுகவின் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடர்ந்து அவற்றில் நேர்மறையான பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும். நான் நேரடியாக ஐடி-விங் பணிகளை கண்காணித்து வருவதால், சமூக வலைதளங்களில் துணிந்து செயல்படுங்கள் என தெரிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள்; மண்டல நிர்வாகிகள்; மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை (1.10.2024 - செவ்வாய் கிழமை). நடைபெற்றது.
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 1, 2024
1(2) pic.twitter.com/wuCHUGPtIJ
இக்கூட்டத்தில் அதிமுகவின் ஐடி-விங் நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் சுயமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்று நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அது போன்ற புகார்களை மாநில தலைமைக்கு தெரியப்படுத்துமாறு கூறினார். மேலும், இளைஞர்களை கவரும் வகையிலான செய்திகளை மட்டும் பகிருங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : "அமைச்சரவை மாற்றம்: பொன்முடிக்கு ஏமாற்றம்; வெந்து போய் இருக்கும் துரைமுருகன்" - பற்ற வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
அஇஅதிமுக இளைஞர் படையால் எழுச்சி பெறுவதை பொறுக்க முடியாமல் வதந்திகளை பரப்பி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் கொத்தடிமைகளின் கவனத்திற்கு.
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) October 1, 2024
வீடியோவை பார்த்த அனைவருக்கும் தெரியும்,அந்த தொலைபேசி எங்கள் தலைவரைப் பார்த்த உற்சாகத்தில் கோஷம் போட உயர்த்திய கரங்களில் இருந்ததுதான் என்று.… pic.twitter.com/I7o0HbvVF8
பொய் செய்திகளை முறியபடிப்பதில் ஐடி-விங் பொறுப்பு முக்கியம். உங்கள் அனைவரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். செல்போன் தான் நமக்கான மேடை. நாம் அனைவரும் செய்தியாளர்கள் போல நினைத்து பதிவுகளை பதிவிட வேண்டாம். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்க வேண்டாம். திட்டமிட்டு அதிமுக குறித்து பொய் செய்தி பரப்பட்டு வருகிறது. அவதூறு செய்திகளை நாம் முறியடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிமுக தலைமையக வளாகத்தில் ஐடி-விங் சார்பில் கட்சி குறித்த காணொலிகளை ஒளிபரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது எதிர்பாரத விதமாக வேகமாக பறந்து வந்த செல்போன் ஒன்று எடப்பாடி கண்ணத்தில் அடித்து கீழே விழுந்தது.
கழகத்தின் கோயிலாம்
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) October 1, 2024
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில்
கழகத்திற்கான, கழகப் பிரச்சாரங்களுக்கான காட்சிப் பதிவுகளைத் திரையிடும்
நிரந்தர LED பதாகையினை
தனது பொற்கரங்களால் திறந்துவைத்த
மாண்புமிகு அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவு நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் கழகத்தின் மூன்றாம்… pic.twitter.com/OHUzrGEZEK
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அதிமுக ஐடி-விங் செயலாளர் ராஜ்சத்யன், "தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு தொண்டர் உற்சாக மிகுதியில் தனது கையை வேகமாக தூக்கியதால் அருகில் இருந்து படம் பிடித்துக் கொண்டிருந்தவரின் செல்போன் மீது கைபட்டு எடப்பாடி பழனிசாமி மீது தவறுதலாக விழுந்து விட்டதாக" கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்