ETV Bharat / state

விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்ச்சி: மெரினாவில் சீறிப்பாய்ந்த விமானங்கள்.. வியப்புடன் கண்டுகளித்த பொதுமக்கள்! - Indian Air Force - INDIAN AIR FORCE

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று துவங்கியது.

வானில் சீறிப்பாய்ந்த விமானங்கள்
வானில் சீறிப்பாய்ந்த விமானங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 8:19 PM IST

Updated : Oct 1, 2024, 9:43 PM IST

சென்னை: உலக அளவில் தலைசிறந்த விமானங்களையும், விமானிகளைக் கொண்டுள்ள இந்திய விமானப்படை, அதன் 92வது ஆண்டுவிழாவைக் கொண்டாடி வருகிறது. இந்த வேளையில் இந்திய விமானப்படையின் மிக பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. குறிப்பாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கின்றது.இதில் அரக்கோணம், பெங்களூர், தஞ்சாவூர், சூலூர் ஆகிய இடங்களில் இருந்து விமானங்கள் தாம்பரம் விமானப்படைத் தளத்திற்குக் கொண்டுவரப்பட இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்: தாம்பர விமானப் படைத்தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அக்.6 காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சி நடைபெறும். தாம்பரம் விமான தளத்திலிருந்து அணிவகுப்பு முடிந்த போர் விமானங்கள் மெரினா கடற்கரை நோக்கி நேரடியாக வருகிறது.

விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் (Video Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க: அதிக வேலைவாய்ப்பு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம்.. மத்திய அரசே சொல்லிடுச்சி!

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 21 ஆண்டுகள் கழித்து சென்னையில் விமானப்படை தினத்தன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. பொதுவாக விமானப்படை தினத்தில் டெல்லியில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் முதல் முறையாக 2022 ஆம் ஆண்டு சண்டிகரிலும், 2023 ஆம் ஆண்டு பிராயக்ராஜிலும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அதிகாரிகள், அமர்ந்து பார்ப்பதற்கான அரங்குகள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

ஒத்திகை நிகழ்ச்சி: முன்னதாக கண் கவர் வான் சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை இன்று முதல் 5 தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைப்பெற்ற ஒத்திகையில் சுகோய் எஸ்யு-30, MI 17 V ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ALH), மல்டிரோல் காம்பாட் ஏர்கிராஃப்ட்,ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை சாகச ஒத்திகையில் பங்கேற்றன.

ஒத்திகையின் போது 2 ஹெலிகஃப்டரில் இருந்து விமானப்படை வீரர்கள் 36 கயிறு மூலம் கீழிறங்கி ஊடுருவல் வாதிகளைக் கைது செய்வது போன்று நிகழ்ச்சிகளைத் தத்ரூபமாகச் செய்து காட்டினர். வானில் சீறிப்பாந்த விமானங்களைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும் தங்கள் செல்ஃபோன்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Last Updated : Oct 1, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.