ETV Bharat / state

இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே - குமுளி மக்கள் பாராட்டு - குமுளி மலைப்பாதையில் கிடந்த குப்பையை அகற்றிய இளைஞர்கள்

தேனி: குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

plastic cleaning
plastic cleaning
author img

By

Published : Jan 19, 2020, 9:21 AM IST

உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள குமுளி மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால், வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும், சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்றுவருகின்றன. இதனால், குமுளி செல்லும் மலைப்பாதைகளில் குவிந்து கிடந்த பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றினர்.

நெகிழிகளை அகற்றும் இளைஞர்கள்

தேனி மாவட்டம் கூடலூர் இளைஞர்கள் நல அறக்கட்டளை தலைவர் சுரேஷ், செயலாளர் சீனு, பொருளாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் லோயர் கேம்ப் பென்னி குவிக் மணிமண்டபத்திலிருந்து குமுளி பேருந்து நிறுத்தம் வரை பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்தக் குழுவினர் அகற்றிய கழிவுகள் மொத்தம் 4.5 டன் என தெரிவித்துள்ளனர்.

'2000ஆம் ஆண்டு தமிழர் கலாசாரம் வியக்க வைக்கிறது' - அமெரிக்கப் பல்கலைக்கழக முதல்வர்

Intro: குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பகுதிகளிலும் குவிந்து கிடந்த 4.5 டன் எடையுள்ள பாலிதீன் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றினர்.
         Body: உலக இளைஞர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் இளைஞர்கள் தங்களால் முடிந்த அளவில் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழக - கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைச்சாலையில் குவிந்து கிடந்த நெகிழிப்பைகளை இளைஞர் குழவினர் அகற்றினர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குமுளி மலைச்சாலையானது தமிழக கேரள எல்லைப்பகுதியில் உ;ள்ளதால் வாகனப்போக்குவரத்து அதிகம். மேலும், சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்று வருகின்றன.
         இதனால் குமுளி மலைச்சாலையில் இரு பகுதிகளிலும் குவிந்து கிடந்த பாலிதீன், பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் காலி பாட்டில்களை தேனி மாவட்டம் கூடலூர் இளைஞர்கள் நல அறக்கட்டளை தலைவர் சுரேஷ், செயலாளர் சீனு, பொருளாளர் தேவராஜ் தலைமையில் 60 க்கும் மேற்பட்டோர் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இருந்து குமுளி பஸ் நிறுத்தம் வரை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
         
Conclusion: இவர்கள் அகற்றிய கழிவுகள் மொத்தம் 4.5 டன் இருந்ததாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே போல் 3.5 டன் கழிவுகளை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது கூடலூர் நகராட்சி அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.