தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில்15-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் கிருமி நாசினி தெளித்து ஊராட்சிப் பகுதியை சுத்தம், சுகாதாரமாக பராமரித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியானது பெரியகுளம் நகராட்சிக்கு அருகில் உள்ளது. பெரியகுளத்தில் நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கீழவடகரை ஊராட்சியில் துப்புரவுப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கீழவடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர் தூய்மைப் பணியாளர்களின் இந்தச் சேவையைப் பாராட்டி அவர்களது குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அனைவருக்கும் பரிவட்டம் கட்டி, சால்வை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி தலா ரூ.500 நிவாரணமாக வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்திய ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் கோவிட்-19 பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு!