தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்துள்ள புலிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லா (எ) செல்வராஜ்(வயது 27). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பல்லவராயன்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் காவல்து றையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு வலைவீச்சு!