ETV Bharat / state

விதையில்லா பச்சை திராட்சையின் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி! - Farmers

தேனி மாவட்டத்தில் விதையில்லா பச்சை திராட்சைக்கு இரண்டாம் போக சாகுபடி தொடங்கிய நிலையில், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விதையில்லா பச்சை திராட்சையின் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

author img

By

Published : Jul 20, 2022, 3:55 PM IST

தேனி: சின்னமனூர் பகுதியில் உள்ள சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் சீட்லெஸ் எனும் விதையில்லா பச்சை திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்திற்கு இரண்டு முறை இந்த திராட்சை பழங்களை விளைவித்து விவசாயிகள் அறுவடை செய்து அண்டை மாநிலமான கேரளாவிற்கும், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பச்சை திராட்சையின் இரண்டாம் போக சாகுபடியில் அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடையின் தொடக்கத்திலேயே திராட்சை பழத்தின் விலை கிலோ ரூ.71 க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இனிவரும் நாட்களில் விலை அதிகரித்து நல்ல மகசூல் பலன் கிடைக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

விதையில்லா பச்சை திராட்சையின் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

இதையும் படிங்க: இனி ஜங்க் புட்ஸ் சாப்பிடாதீங்க... அடிக்கடி பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா...? ஆய்வில் தகவல்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.