தேனி: தேனியில் பிரபல பருப்பு மில் உரிமையாளர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமாருக்குச் சொந்தமான அலுவலகம், பருப்பு மில் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், இரண்டாவது நாளாக இன்றும் (டிச.07) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு வழிகாட்டுதலின்படி, 3 வருமான வரித்துறை துணை இயக்குநர்களின் தலைமையில், பிற வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தேனியில் செயல்பட்டு வரும் ஏ.எம்.ஆர் நிறுவனத்திற்குச் சொந்தமான பருப்பு மில்லில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பருப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பருப்பு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில், பருப்புகளை விற்பனை செய்யும் பிரபல பருப்பு மில் உரிமையாளர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமாரின் அலுவலகம், பருப்பு மில் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையானது, வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு வழிகாட்டுதலின்படி, 3 வருமான வரித்துறை துணை இயக்குநர்களின் தலைமையில், சென்னை கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பிரபல பருப்பு மில் உரிமையாளர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமாருக்குச் சொந்தமான அலுவலகத்தில் நேற்று தொடங்கிய சோதனையானது, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு - முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து!