உலகளவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்றங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, தீர்ப்புகள் ஒத்தி வைக்கப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்குகளின் வாய்தா விவரங்களை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு, நீதிமன்றங்கள் வாயிலில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகளை மட்டும் வழக்கறிஞர்களின் அறிவுரைப்படி தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் செயல்பட்டுவரும், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களும் இன்று முதல் மூடப்பட்டன. இதனால் நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க:இன்றிரவு முதல் புதுச்சேரியில் 144 அமல்!