ETV Bharat / state

காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களுக்கு 7 நாள் விடுமுறை - நோய் தடுப்புத் துறை அறிவிப்பு - health inspection dengue precaution

தேனி: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் பள்ளி மாணவர்களுக்கு ஏழு நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.

health inspection dengue precaution
author img

By

Published : Nov 15, 2019, 8:58 PM IST

தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ஊரக, பேரூராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட இடங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்குதல், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல், புகை மருந்து அடித்தல், மருந்து வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேனி அருகே உள்ள அன்னஞ்சி கிராமத்தில் நடைபெறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் இன்று ஆய்வு செய்தார்.

health inspection dengue precaution

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேனி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ஏழு நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய கிருஷ்ணராஜ், சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Intro: காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் மாணவர்களுக்கு 7நாட்கள் விடுமுறை வழங்கிட பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இணை இயக்குநர் தகவல்.

Body: தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ஊரக, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட இடங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்குதல், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல், புகை மருந்து அடித்தல், மருந்து வழங்குதல், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பணிகளை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் இன்று ஆய்வு செய்தார். தேனி அருகே உள்ள அன்னஞ்சி கிராமத்தில் நடைபெறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார். முன்னதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் போதிய அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதா எனவும், மருத்துவ உபகரணங்கள் இயங்கும் நிலையில் இருப்பதையும் ஆய்வு செய்தார்.
அன்னஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்த இணை இயக்குனர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கு தனித்தனி படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளும் மற்றும் 30 படுக்கை வசதிகள் கொண்ட 8 மருத்துவமனைகளில் 240 படுக்கைகள் என 390 படுக்கை வசதிகள் உள்ளன. காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக ஏழு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் காணப்பட்டால் 7 நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிகிச்சையின் போது இடையிடையே வீட்டிற்குச் செல்லக்கூடாது. 6 மற்றும் 7வது நாட்கள் மிக முக்கியமானது. டெங்கு காய்ச்சல் என்பது அம்மை நோய் போல சாதாரணமானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானதாகும்.
டெங்குவை ஒழிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக 5 கோடி ஒதுக்கியுள்ளார். இரவு பகல் பாராமல் அமைச்சர் மட்டுமல்லாது அதிகாரிகளும் டெங்கு தடுப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : கிருஷ்ணராஜ் - இணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.