ETV Bharat / state

'குடிநீர் தட்டுப்பாட்டுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை' - ஓபிஎஸ் - மின் உற்பத்தி

தேனி: தமிழ்நாட்டில் நிலவிவரும் குடிநீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

OPS
author img

By

Published : Jun 15, 2019, 7:24 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி; பகிர்மான கழகத்தில் உள்ள 16 மின் பகிர்மான வட்டங்களில் ரூ.4.85 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுதுநீக்கும் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட தேனி மின் பகிர்மான வட்டத்தில், ரூ.25.52 லட்சம் மதிப்பில் பிரத்யேக கணினிமயமாக்கப்பட்ட மின்தடை பழுது நீக்கும் மையத்தை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். இது தேனி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடி, ராசிங்கபுரம், தேவாரம், கூடலூர், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு லட்சத்து 89 ஆயிரத்து 585 மின் இணைப்பு பயனீட்டாளர்கள் பயனடைவார்கள்.

மக்கள் தங்கள் மின் இணைப்பில் ஏற்படும் மின் தடை குறித்த விவரத்தை 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வயர்மேன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறைந்த நேரத்தில் பிரச்னை சரி செய்யப்படும். மேலும் இந்த மையமானது 24 மணி நேரமும் செயல்படும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் துணை முதலமைச்சரிடம், நிலவும் குடிநீர் பற்றாக்குறை குறித்த கேள்வி முன்வைத்தபோது, "தமிழ்நாட்டில் நிலவுகின்ற குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்ட குடிநீர் தேவைகள் குறித்து தெரிவித்ததை வைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

'குடிநீர் தட்டுபாடுக்கு போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது' - ஓபிஎஸ்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Intro: தமிழகத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.
தேனியில் தானியங்கி மின்தடை பழுது நீக்கும் சேவை மையத்தை திறந்து வைத்த பின் பேட்டி.

Body: தமிழக முதல்வரால் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 16 மின்பகிர்மான வட்டங்களில் ரூ. 4.85கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுதுநீக்கும் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மண்டலத்திற்குட்பட்ட தேனி மின் பகிர்மான வட்டத்தில் பிரத்யேக கணினிமயமாக்கப்பட்ட மின்தடை பழுது நீக்கும் மையம் இன்று தொடங்கப்பட்டது. தேனி மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலக வளாகத்தில் ரூ.25.5 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இம்மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்.
தேனி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள தேனி,பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி,சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடி, ராசிங்கபுரம், தேவாரம், கூடலூர், சுருளிப்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள 4,89,585 மின் இணைப்பு பயனீட்டாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். நுகர்வோர் தங்கள் இணைப்பில் ஏற்படும் மின் தடை குறித்த விவரத்தை இலவச அழைப்புக்கான 1912என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட ஒயர்மேன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறை நிவர்த்தி செய்யப்படும். இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட பின் அலுவலக வளாகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மரக்கன்று நட்டு வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர், தமிழகத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சனையை சமாளிப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் முன்மொழிவுகளின்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் - துணை முதல்வர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.