ETV Bharat / state

இறந்தும் உயிர் வாழும் வருவாய் ஆய்வாளர்! சொன்னதை நிறைவேற்றும் முதலமைச்சர்! அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்! - theni Revenue Inspector

விபத்தில் உயிரிழந்த தேனி வருவாய் ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் உடலுக்கு அரசு மரியாதை
தேனி வருவாய் ஆய்வாளர் வடிவேலு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:36 AM IST

தேனி: சாலை விபத்தில் உயிரிழந்த தேனி வருவாய் ஆய்வாளரின், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இன்று (செப்.26) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வடிவேலு. இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, வடிவேலு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த வடிவேலு கடந்த 24ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அவரின் உடல் உறுப்புகள் நேற்று (செப். 25) தானம் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: அவதூறு கருத்து! ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதி மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகளை தானம் செய்த வருவாய் ஆய்வாளர் வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அவரின் இறுதி சடங்கில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உயிரிழந்த வடிவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்.

இதையும் படிங்க: மகளிருக்கு 33% சிறப்பு; திருநங்கைகளுக்கு 2% இடஒதுக்கீடு எப்போது? - திருநங்கை பத்மினி அரசுக்கு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.