ETV Bharat / state

தேனியில் நெல்லிக்காய் சாகுபடி அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி: நெல்லிக்காய் சாகுபடி அமோகமாக நடைபெறுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லிக்காய் சாகுபடி
author img

By

Published : Apr 27, 2019, 3:13 PM IST

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போடி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டக்குடி, முல்லை மற்றும் வைகை ஆற்றின் தண்ணீர் பாய்கின்ற பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி அமோகமாகவுள்ளது.

இதனால் தேனி, மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் நெல்லிக்கனியைக் கொள்முதல் செய்ய தேனி சந்தைகளில் குவிகின்றனர்.

தேனியில் நெல்லிக்காய் சாகுபடி அமோகம்

இது குறித்து, உப்பார்பட்டி விவசாயிகள் கூறும்போது, வேப்பம் புண்ணாக்கு, ஆடு, மாடுகளின் சாணம் என இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களையே உரமாக பயன்படுத்துகின்றோம். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி நடைபெற்றாலும், மண்வளம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாய்கின்ற தண்ணீரால் தேனி மாவட்டப் பகுதிகளில் விளைகின்ற நெல்லிக்காய்களுக்கு இயற்கையாகவே சுவை அதிகமாகவுள்ளது. இதனால் கேரள சந்தையில் தேனி மாவட்ட நெல்லிக்காய்களுக்கு தனி கிராக்கி உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 25 வரை கொள்முதல் செய்யப்படட்து. இந்த ஆண்டு கிலோ 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Intro: கேரளாவிற்கு ஏற்றுமதியாகும் தேனி மாவட்ட நெல்லிக்கனிகள்.! சுவை மிகுந்ததாகவும்! சக்தி நிறைந்ததாகவும்! உள்ளதால் அதிக அளவில் வியாபாரிகள் குவிகின்றனர்.!

Body: தேனி மாவட்டம் போடி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி, முந்தல் உள்ளிட்ட இடங்களில் நெல்லிக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. கொட்டக்குடி, முல்லை மற்றும் வைகை ஆற்றின் தண்ணீர் பாய்கின்ற இப்பகுதிகளில் விளைகின்ற நெல்லிக்கனிகள் சுவை மிகுந்ததாகவும் சக்தி நிறைந்ததாகவும் உள்ளதால், தேனி, மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் இங்கு குவிகின்றனர்.
செடியாக நடவு செய்தல், பராமரித்து, உரமிடுதல், களை எடுத்தல் என மூன்று ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு மரமாக வளர்ந்த பின்தான் நெல்லிக்கனிகள் அறுவடை செய்ய இயலும். அதன் தொடர்ச்சியாக வருடம் முழுவதும் காய்கள் அறுவடை செய்யலாம். கோடையில் காய் வெடிப்பு, இலையுதிர் காலத்தில் உதிர்வு என இருந்தாலும் மழை, பனிவிழும் காலங்களில் நெல்லிக்காய் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை என்பதால் அதிகளவு மகசூல் கிடைக்கும். இவ்வாறு ஆண்டுதோறும் பயன் தரக்கூடிய சாகுபடியாக விளங்குவதால் நெல்லிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பெரியசாமி கூறுகையில், வேப்பம் புண்ணாக்கு, ஆடு, மாடுகளின் சாணம் என இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களையே உரமாக பயன்படுத்துகின்றோம். மண்வளம், மேற்கு தொடர்ச்சி மலையில் பாய்கின்ற தண்ணீர் என்பதால் இங்கு விலை என்ற காய்களுக்கு இயற்கையாகவே சுவை அதிகம். மேலும் செடியாக நடவு செய்து, முறையாக பராமரித்து வளர்த்து வந்தால், வருடத்திற்கு வருடம் சாகுபடி அதிகரித்து நல்ல லாபம் அடையலாம் என தெரிவித்தார்.
கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரி முத்துக்காளை கூறுகையில், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நெல்லிக்கனி சாகுபடி நடைபெற்றாலும், தேனி மாவட்டத்தில் விளையக்கூடிய காய்களுக்கு இயற்கையாகவே சுவை என்பதால், கேரள சந்தையில் இதற்கு தனி கிராக்கி உள்ளது. இதனால் அதிக அளவில் நெல்லிக்காய்கள் இங்கிருந்துதான் ஏற்றுமதியாகின்றன.
விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 25 வரை கொள்முதல் செய்து வந்தோம். இந்த ஆண்டு கிலோ 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு சுமார் 100 டன் வரை ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதனை விட சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கும் இதன் மூலம் அன்றாட வேலை வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

Conclusion: பேட்டி : 1) முத்துக்காளை (கேரள ஏற்றுமதி வியாபாரி, பெரியகுளம்)
2) மகாலட்சுமி ( நெல்லிக்காய் விவசாய தினக்கூலி, பெரியகுளம்)
3) பெரியசாமி (விவசாயி - உப்பார்பட்டி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.