தேனி: பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ஆட்டுக்கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியன் வனத்துறையினர் தன்னை தாக்கியும், மிரட்டியும் வழக்குப்பதிவு செய்ததாக கூறிய நிலையில், ’மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தாக்கியதை தெரிவித்தால் குடும்பத்தை கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தி, தன்னை சிறையில் அடைத்ததாக ஜாமீனில் வெளிவந்த அன்றே பெரியகுளம் நகரின் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தென்கரை காவல்துறையினர் பாதிக்கப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த புகாருக்கு இதுவரையில் வனத்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கும் பதிவு செய்யாத நிலையில், இன்று காவல்துறையினரின் விசாரணைக்காக வந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் மீண்டும் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் களைகட்டிய மலர்க் காவடி திருவிழா!