தேனி மாவட்டம் போடி புதுக்காலணி பகுதியில் உள்ள ஓம் சக்தி கோயில் தெருவைச் சேர்ந்த மாதவன் என்பவரது மகன் கேசவன்(15). இவர் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்றிரவுதூங்காமல் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் கேட்கவே, நடந்ததை எல்லாம் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனிடம் இது குறித்து விசாரிக்க சென்றபோது அவர்களை கல்லால் அடித்து தாக்கியுள்ளான். இதில் சிறுமியின் சித்தப்பா பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பள்ளி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்தனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது