ETV Bharat / state

தொடரும் கிசான் திட்ட மோசடி: விவசாயிகளுக்கான பணத்தை திருடும் கும்பல்; சிபிசிஐடி விசாரணைக்கு கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயி குற்றஞ்சாட்டியுள்ளார். கிசான் திட்ட மோசடிகளை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Fraud in Kisan scheme
Fraud in Kisan scheme
author img

By

Published : Sep 6, 2020, 2:36 PM IST

தேனி: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறு, குறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வீதம் வழங்கப்படும். இவை ரூ.2000 என மூன்று தவணைகளாக பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இச்சூழலில், மதுரை, கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி பசும்பொன் அதிபதி என்பவர் 2018ஆம் ஆண்டு இறுதியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இதற்காக தனது ஆதார் எண், நில உரிமை நகல், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை இணைத்து பதிவு செய்துள்ளார். ஆனால் விண்ணப்பித்து இரண்டாண்டு ஆகியும் தற்போது வரை அவரது வங்கிக் கணக்கில் பணம் ஏதும் வரவு வைக்கப்படவில்லை.

இதனிடையே அப்பகுதியில் கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயி ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, செப்டம்பர் ஒன்றாம் தேதி அரசு இ-சேவை மையத்தில் தனது ஆதார் எண்ணைக் கொண்டு கிசான் திட்டத்தின் மூலம் பணம் வருகின்றதா என விசாரணை மேற்கொண்ட போதுதான் விவசாயி பசும்பொன் அதிபதி அதிர்ந்து போனார்.

கிசான் திட்டத்திற்காக அவர் வழங்கிய ஆதார், தொலைபேசி எண், நில உரிமை நகல் அனைத்தும் அவரது பெயரில் உள்ளது. ஆனால் பணம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு எண் மட்டும் வேறொருவரின் வங்கிக் கணக்கு எண்ணாக இருந்தது. அந்த வங்கிக் கணக்கில் ரூ.2000 வீதம் தற்போது வரையில் 5 தவணைகளாக ரூ.10ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் கிசான் திட்ட மோசடி

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் அறிவித்த நிதியுதவி திட்டத்தில் உண்மையான விவசாயிகள் பயனடையவில்லை. மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இது போல பாதிக்கப்பட்டுள்ளனர்.

புகார் குறித்து பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே கிசான் திட்ட முறைகேடுகளை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.