ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக்தந்த முகவர் கொலை - agent murder

தேனி: சின்னமனூர் அருகே மனைவிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்த முகவரை கொலை செய்து புதைத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வெளிநாட்டு வேலை வாங்கிதந்த ஏஜென்ட் கொலை
author img

By

Published : Jun 23, 2019, 10:23 AM IST

கடலூர் மாவட்டம், கொத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (65). இவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தேனி மாவட்டம், சீலையம்பட்டிக்கு சென்றுவருவதாக தனது மகனிடம் கூறிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் தந்தையிடமிருந்து அழைப்பு வராததால், சந்தேகமடைந்த கருணாநிதியின் மகன் வினோத் 20ஆம் தேதி சின்னமன்னூர் காவல் நிலையத்தில் தந்தையைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

மேலும் புகார் கொடுத்த அன்று சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் (40) என்பவர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காணாமல்போன தனது தந்தை கருணாநிதியை தேடவோ, விசாரிக்கக் கூடாது என செல்போன் மூலம் மிரட்டியதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டு வேலை வாங்கிதந்த ஏஜென்ட் கொலை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீலையம்பட்டி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அஜ்மல்கான் அரளிவிதையை அரைத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அஜ்மல்கானிடம் விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவலை அளித்தார்.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது, அஜ்மல்கானின் மனைவி ஆஷாபானுவுக்கு சென்ற வருடம் ஒப்பந்த அடிப்படையில், குவைத் நாட்டில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அவரது மனைவியுடன் கருணாநிதியின் மகன் வினோத்குமார் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஜ்மல்கான், அவரை கொலைச் செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்ட அஜ்மல்கான், தேனியில் இருந்து சிலர் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், தேனி வந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி கடந்த 16ஆம் தேதி தேனிக்கு வந்த கருணாநிதியை, அஜ்மல்கான் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தலையில் அடித்து கொலைச் செய்துவிட்டு தனது வீட்டின் அருகில் இருந்த காலி நிலத்தில் புதைத்துள்ளார்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் காலி நிலத்தில் புதைத்திருந்த கருணாநிதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அஜ்மல்கானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro: சின்னமனூர் அருகே மனைவிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்த ஏஜென்ட்டை கொலை செய்து புதைத்த கணவர் கைது.
ஒரு வாரத்திற்குப்பின் வட்டாட்சியர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை.

Body: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (65). வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் வாங்கித்தரும் ஏஜென்டாக செயல்பட்டு வரும் இவர், கடந்த ஜூன் 16ம் தேதி வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் சீலையம்பட்டிக்கு சென்று வருவதாக தனது மகனிடம் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் வரை அவரிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வராத நிலையில் மொபைல் எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வினோத்குமார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தொடர்பு கொண்டும் எங்கும் கிடைக்காத நிலையில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வியாழக்கிழமை சின்னமனூர் காவல் நிலையத்தில் தந்தையை காணவில்லை என வினோத்குமார் புகார் அளித்துள்ளார்.
புகாரில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டி யில் உள்ள அம்பேத்கர் காலனியில் வசிக்கும் அஜ்மல்கான் (40) என்பவர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காணாமல் போன தனது தந்தை கருணாநிதியை தேடவோ, விசாரிக்கக் கூடாது என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட அஜ்மல் கான் தனது வீட்டருகே அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் அவரை மீட்டுள்ளனர்.
சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் தனது மனைவி ஆஷாபானு கடந்த ஒரு வருடத்திற்கு முன் குவைத் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரத்தில் உள்ள ஏஜெண்டான கருணாநிதி செய்து கொடுத்துள்ளார்
இதன் தொடர்ச்சியாக அவரது மகன் வினோத்குமார் உடன் சேர்ந்து அஜ்மல்கானின் மனைவி நெருக்கமாக இருந்ததை பார்த்து வெறுப்படைந்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல்கான் சீலையம்பட்டியில் இன்னும் சில பேர் வெளிநாட்டிற்கு செல்ல விருப்பம் உள்ளதாக கூறி, சிதம்பரத்தில் இருந்த கருணாநிதியை
வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சீலையம்பட்டியில் தனியே வசித்து வரும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மண்வெட்டியால் கருணாநிதியின் தலையில் அடித்துக் கொலை செய்து அருகில் உள்ள காலி இடத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் அஜ்மல்கான்.
இந்நிலையில் இன்று போடி வட்டாட்சியர் ஆணந்தி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் முன்னிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கருணாநிதியின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று தடயவியல் மற்றும் நுண்ணறிவு பிரிவினர் ஆதாரங்களை திரட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு தொடர்ந்து விசாரணை வருகின்றனர்.
இதனிடையே ஒரு வருடத்திற்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள ஆஷாபானு, தொடர்ந்து ஆறு மாதமாக கணவரின் வங்கி கணக்கில் தனது சம்பளப் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மனைவியின் சம்பளப் பணத்தை சேமித்து வைக்காமல் அஜ்மல்கான் செலவழித்து வந்துள்ளார். இதனால் கணவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவதை தவிர்த்து தனது தங்கையின் கணக்கிற்கு கடந்த 4மாதமாக ஆஷாபானு பணம் அனுப்பி வைத்துள்ளார். இதன் காரணமாக சம்பளப்பணம் தனது கைக்கு வராமல், விரக்தியடைந்த அஜ்மல்கான், மனைவி வெளிநாடு செல்ல காரணமான கருணாநிதியை கொலை செய்ததாக இறந்தவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

Conclusion: மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜென்ட் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : வைத்தியநாதன் - இறந்தவரின் உறவினர், கடலூர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.