ETV Bharat / state

தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்! - தேனி குமுளி நெடுஞ்சாலை

Forest department shot a man in Theni: தேனியில், அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறி வனத்துறையினர் ஒருவரை சுட்டுக்கொன்றனர்.

வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஈஸ்வரன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:48 AM IST

தோட்ட வேலைக்குச் சென்றவரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றதால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஈஸ்வரன். இவர் வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். தோட்ட வேலைக்காகச் சென்ற அவர், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும், ஈஸ்வரன் அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறி, ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பம் அரசு மருத்துவமனை முன்பு, தேனி - குமுளி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்.. மீட்கும் பணியில் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்றது முறையற்றது என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தோட்ட வேலைக்குச் சென்றவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டதாக காவல்துறை ஆய்வாளர் மீது மாமனார் பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.