ETV Bharat / state

வைகை அணை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வைகை அணை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி : தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததையடுத்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்துள்ளது.

வைகை அணை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Jan 14, 2021, 9:42 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்துவரும் கன மழை பொழிந்துவருகிறது. அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.

கூடுதலான நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி, ஆயிரத்து 652 கனஅடியாக இருந்த நீர் இருப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, வைகை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணை கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதனை தொடர்ந்து, கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 68.50 அடியை எட்டியவுடன் இரண்டாம் எச்சரிக்கையும் அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை நீர் மட்டம் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வைகை அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.