ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணி குறித்து ஐவர் குழு ஆய்வு

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

mullaiperiyaru-dam
mullaiperiyaru-dam
author img

By

Published : Jan 13, 2021, 7:13 PM IST

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. தென் தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அணையை கண்காணிக்க மூவர் குழுவை நியமித்தது.

இந்த குழுவுக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணைக்குழு உருவாக்கப்பட்டு தற்போது, அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் இருந்து வருகிறார். இக்குழுவில் தமிழ்நாட்டு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

mullaiperiyaru-dam

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.75 கன அடியாக இருந்தபோது, துணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் இன்று (ஜனவரி 13) ஆய்வு மேற்கொண்டனர். தேக்கடியில் உள்ள படகுத்துறையில் இருந்து அணைப்பகுதிக்கு சென்ற துணைக் குழுவினர், பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் ஐவர் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.