ETV Bharat / state

கரோனா கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து!

தேனி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை

author img

By

Published : Apr 13, 2020, 12:23 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை அறையே தற்போது கரோனா கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் சிகிச்சை பெற்று வருபவர்கள் என கரோனா குறித்த அனைத்து தகவல்களும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கரோனா கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அலுவலர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும் தீயணைப்பு துறையினர் வரும்வரை காத்திருக்காமல் அங்கு இருந்த தீயணைப்பு கருவிகள் கொண்டு தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நடத்திய சோதனையில் இன்வெர்ட்டர் மூலம் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதையும் படிங்க: மின் நிலையத்தின் சாயப்பட்டறை இடிந்து விழுந்து விபத்து - இருவர் உயிரிழப்பு
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.