ETV Bharat / state

தேனியில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.2 கோடிக்கு மேலான பொருட்கள் சேதம்! - Electrical discharge

பெரியகுளம் பகுதியில் நாப்கின் மற்றும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

fire department
முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
author img

By

Published : Aug 4, 2023, 1:20 PM IST

முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் நாப்கின் மற்றும் முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பிற்பகல் 1 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

இதனைத்தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், தேனி மற்றும் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தீ பரவியதால் போடி நகரில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் உட்பட மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் டேங்கர் லாரிகள் போன்றவற்றில் நீர் வரவழைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், பஞ்சு மற்றும் தயார் செய்து வைக்கப்பட்ட நாப்கின்கள் மற்றும் முகக் கவசங்கள் மற்றும் இயந்திர தளவாடங்களில் தீ முற்றிலும் பரவியது. மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்ட நேரம் போராடினர். அதன் பின் இறுதியில் 8 மணி நேரத்திற்கு பின் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், தொழிற்சாலை முழுவதும் தீயில் எரிந்து சேதம் ஆனதால், இயந்திர தளவாடங்கள், மூலப் பொருட்கள் மற்றும் தயார் செய்து வைக்கப்பட்ட முகக்கவசம் மற்றும் நாப்கின் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது. இதில், 2 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் தொழிற்சாலை சேதம் அடைந்ததாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொழிற்சாலையில் தீ பரவுவதற்கு முன்னதாக, பணியாற்றிய பெண்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டதால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையும் படிங்க:வாலிபால் போட்டியை வேடிக்கை பார்த்த நபரை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.