ETV Bharat / state

மகளுடன் காதலை துண்டிக்காததால் கோபம்... இளைஞர் கழுத்து அறுத்து கொலை!

author img

By

Published : May 21, 2023, 7:33 AM IST

காதல் விவகாரத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் காதலித்த பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செயப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

தேனி: வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் கமலேஷ்வரன். இவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த கமலேஷ்வரனை அவரது அம்மா மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கமலேஷ்வரனுக்கு சமூக வலைதளம் மூலமாக போடேந்திரபுரத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகளுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சன்னாசியின் மகள் தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் சன்னாசியின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே உடனடியாக சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மற்றும் மகன் ஜெயபிரகாஷ் ஆகியோர் கமலேஷ்வரன் வீட்டிற்கு சென்று கமலேஷ்வரனின் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி சன்னாசி குடும்பத்தினர் கமலேஷ்வரனை கடுமையாக தாக்கியுள்ளனர். மீண்டும் தனது மகளிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து மீண்டும் கமலேஷ்வரன் சன்னாசியின் மகளிடம் செல்போனில் பேசி காதலை வளர்த்துள்ளார். இது சன்னாசிக்கு தெரிய வரவே மீண்டும் கமலேஷ்வரனை கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு கமலேஷ்வரன் சன்னாசியின் மகளை அழைத்து சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சன்னாசியின் குடும்பத்தினருக்கு கமலேஷ்வரன் மீது கடும் கோபம் ஏற்பட்டது. பலமுறை எச்சரிக்கை செய்தும் அதனை கேட்காமல் தனது மகளை காதலிப்பதால் ஆத்திரமடைந்த சன்னாசி மற்றும் அவரது குடும்பத்தினர் கமலேஷ்வரனை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சன்னாசி வீருசின்னமாள்புரத்திற்கு அடிக்கடி சென்று கமலேஷ்வரனின் நடமாட்டத்தை கண்கானித்து வந்துள்ளார். இந்த நிலையில் கமலேஷ்வரன் விவசாய தோட்டத்திற்கு செல்வதை அறிந்த சன்னாசி அவரின் பின்னால் சென்று தன் கையில் இருந்த கத்தியை வைத்து கமலேஷ்வரனை குத்தி விட்டு, அவரின் கழுத்தை முற்றிலுமாக துண்டித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகினார்.

வீட்டை விட்டு வெளியே சென்று வெகு நேரம் ஆனதால் பயந்து போன கமலேஷ்வரனின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது ஊருக்கு ஒதுக்குபுறமான தோட்டத்தில் கழுத்து துண்டிக்கபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில் சன்னாசி குடும்பத்தினருக்கும் கமலேஷ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்த தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை செய்தது சன்னாசி குடும்பத்தினர் தான் என தெரிய வந்ததை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சன்னாசி தான் இந்த கொலையை செய்தார் என்றும், கொலைக்கு உடந்தையாக சன்னாசியின் மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் இருந்ததும் தெரிய வந்தது.

பலமுறை தனது மகளிடம் தொடர்பு கொள்ள கூடாது என கூறியும் அதனை மீறி அடிக்கடி செல்போனில் பேசியும், தனது மகளை கோயில் திருவிழாவிற்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்ததால் ஆத்திரமடைந்து கொலையை செய்தது தெரிய வந்தது. பின்னர் சன்னாசி மற்றும் அவரது குடும்பத்தினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சன்னாசி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும் இவருக்கு கொலை புதிதல்ல என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காதல் விவகாரத்தில் 12ஆம் வகுப்பு மாணவனை காதலித்த பெண்ணின் குடும்பத்தாரே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் விரக்தி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.