ETV Bharat / state

காவலர்கள் பெயரில் வழிப்பறி - 3 பேர் கைது! - fake police tired to steal 8 lakhs from vehicle owner

தேனி: தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் என்ற பெயரில் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருட முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழிப்பறி
வழிப்பறி
author img

By

Published : Jan 20, 2020, 8:04 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் பெங்களூரை நோக்கி தனது வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சரக்கு வாகனம் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எண்டப்புளி பகுதியில் சென்று கொண்டிருக்கையில், 3 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

அவர்கள் ஓட்டுனரிடம் நாங்கள் காவலர்கள் என்றும், வாகனத்தில் நீங்கள் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே உடனடியாக சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், செல்வம் வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திடீரென்று அபகரித்து ஓட முயற்சி செய்துள்ளனர்.

இதைப் பார்த்த செல்வம் சுதாரித்து, கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை மூவரிடமும் விசாரணை நடத்தினர்.

அதில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினர்கள் வேல்மணி, அருண்குமார் ஆகியோருடன் இணைந்து போலி காவலர்களைபோல் ஏமாற்றி வழப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி 17 சவரன் நகை திருட்டு! - அதிர்ச்சியில் மருத்துவர் குடும்பம்

Intro: பெரியகுளம் அருகே வெள்ளைப்பூண்டு வியாபாரியிடம் காவல்துறையினர் எனக்கூறி 8.5லட்சம் பணம் வழிப்பறி செய்ய முயற்சி. ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் உட்பட 3பேர் கைது செய்து சிறையில் அடைப்பு.
Body:         கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தேனி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து விட்டு மீண்டும் பெங்களுர் நோக்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எண்டப்புளி பகுதியில் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில், 3பேர் கொண்ட கும்பல் ஒன்று வாகனத்தை வழிமறித்து தங்களை காவல்துறையினர் எனக்கூறியுள்ளனர். மேலும் சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாகவும், அதனை சோதனை செய்ய வேண்டும் என்று செல்வத்திடம் இருந்த பணம் ரூ.8.5லட்சத்தை அபகரித்து ஓட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
         அச்சமடைந்த செல்வம் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மூவரையும் மடக்கிப் பிடித்தனர். அதன்பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மூவரிடமும் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் என்பவர் மற்றும் அவருக்கு உதவியாக அவரது உறவினர்களான வேல்மணி, அருண்குமார் ஆகியோர் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடந்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Conclusion: தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற காவலரே வாகனத்தை நிறுத்தி வழிப்பறி கொள்ளை சம்மபவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.