கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வருமானமின்றி ஏழை, எளிய மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கிளை சார்பாக, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவ – மாணவியர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தேனி யூனியனில் உள்ள 45 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் 400 மாணவ - மாணவிகளின் குடும்பங்களுக்கு 450 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலச் செயலாளர் முருகானந்தராஜா தலைமையில், 3 குழுக்களாகப் பிரிந்து சமூக இடைவெளியுடன் இந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.