தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேவராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் தற்காலிக ஊழியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்போது மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மின் ஊழியரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மருகனின் குடும்பத்தினர் நிவாரணம் வழங்கக் கோரி கடமலைக்குண்டு மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
உடனே அங்கு வந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வாரிசு வேலையும், நிவாரணமும் அரசு வழங்க உள்ளதாக மின் ஊழியரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்' - மின் ஊழியர் சங்கத்தினர்